BREAKING NEWS

முல்லை முஸ்ரிபாவின் கவிதைத்தொகுதி “சொல்லில் உறைந்து போதல்

(அ~;ரப் ஏ சமத்)

கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் உப அதிபரும் கவிஞருமான முல்லை முஸ்ரிபாவின் முன்றாவது கவிதைத்தொகுதி “சொல்லில் உறைந்து போதல்” எனும் கவிதைத் தொகுதி கொழும்பு பாத்திமா கல்லூரியின் றிபாய் ஹாஜி கூட்ட மண்டபத்தில் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது.


முல்லைத்தீவினை பிறப்பிடமாகக் கொண்ட முல்லை முஸ்ரிபா ஆசிரியர் கொழும்பு அல் ஹிதாயா அல் ஹிக்மா கல்லூரியின் பட்டதாரி ஆசிரியர் அதிபர் தரத்தை உடையவர்.

அவர் இடம்பெயர்ந்து சம்பந்தமாக ஏற்கனவே அவாவுறும் நிலம், இருத்தலுக்கான அழைப்பு எனும் இரு கவிதைத் தொகுதிகளையும் ஏற்கனவே வெளியீட்டுள்ளார்.

அவரின் கவிதைகள் வடக்கு கிழக்கு மக்களின் இன்ப துன்பங்கங்களைப் பேசுகின்றன. இடம்பெயர்ந்த முஸ்லீம் சமுகத்தின் பேரினவதத்தினதும் குருந் தமிழ் தேசியத்தினதும் கொடுமைகளை அனுபவித்த சமுகம் அகதி வாழ்க்கை இடம்பெயர்வு பற்றி ஒரு பதிவாக இக் கவிதைத் தொகுதியைவெளியீட்டுள்ளார்.

இந் நிகழ்வு பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் செ.யோகராசா, தெ.மதுசுதனன், சட்டத்தரணி மர்ஸ_ம் மௌலானா, மேம்மன்கவி, ஆகியோர் நூல்பற்றியும் உரையாற்றினார்கள். பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள இருந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் பதுளை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் அங்கிருந்து அவர்
சார்பாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பிணர் எம். ரீ. ஹசன் அலி கலந்து சிறப்பித்தார். நூலின் ;முதற்பிரதியை தெல்தோட்ட இப்றாஹிமியா அரபிக் கல்லூரி ஸ்தாபாகர் அல்ஹாஜ் வை.எம்.எம் இப்றாஹீம் ஜே.பி பெற்றுக்கொண்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar