BREAKING NEWS

nஜயலலிதா குற்றவாளி என தீர்ப்பு முதல்வர் பதவியையும் இழந்தார்

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில்


18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நேற்றுப் பிற்பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கில் டி. குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன். இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவித்தது.


பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் கூறியதாவது- “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம். எல். ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar