BREAKING NEWS

வடமாகாணத்துக்கு ரூ30கோடி ஒதுக்கீடு. ஆனாலும் தமிழ் மக்கள் உரிமை விடயத்தில் ஏமாற மாட்டார்கள்.


1500 குடும்பங்களுக்கு 12.5 கோடி ரூபா வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு நஷ்டஈட்டு நிவாரணம் வழங்க இவ்வருடத்தில் 30 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் இதுவரை 10.9 கோடி ரூபா நஷ்டஈடு செலுத்தப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த நஷ்டஈட்டு நிவாரண திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு 12.5 கோடி ரூபாவை வழங்கும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 10 மணிக்கு கிளிநொச்சி இரணமடுவ “நெனும் பியஸ” மண்டபத்தில் நடைபெறும்.
புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பிலான இந்தத் திட்டத்தில் யுத்தத்தினால் கணவரை இழந்தவர்கள், காயமுற்றோர் பொருட் சேதம் ஏற்பட்டோர் உட்பட சேதமான மத வழிபாட்டுத்தலங்களுக்கும் நஷ்டஈட்டு உதவி வழங்கப்படும். பிரதேச செயலாளர், அரச அதிபர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் இந்த நஷ்டஈட்டுத் தொகைக்கான சிபார்சுகளை வழங்குவர்.
யுத்தத்தினால் சேதமடைந்த 100 மத வழிபாட்டுத்தலங் களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறுமென புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஈ.ஏ. சமரசிங்ஹ தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் நஷ்டஈடுகள் நிவாரணமாக வழங்கப்படுமெனவும் சமரசிங்ஹ மேலும் தெரிவித்தார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar