BREAKING NEWS

ஊவா மாகாண சபையின் அமைச்சரவை நேற்று பதவியேற்பு


முதல்வர் சசீந்திர, செந்தில் உட்பட ஐவர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்
ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், உட்பட ஐந்துபேர் அமைச்சர்களாக நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். நேற்று 16ம் திகதி காலை அலரிமாளி கையில் இப்பதவியேற்பு வைபவம் நடைபெற்றது.

முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, ஊவா மாகாண நிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, காணி, கலாசாரம், சமூக நலன்புரி மற்றும் (கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள், நிர்மாணத்துறை அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
செந்தில் தொண்டமான், ஊவா மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராகவும் நியமி க்கப்பட்டுள்ளார். அநுர ரவீந்திர விதானகமகே, ஊவா மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி, நன்நீர் மீன்பிடிப்பு, போக்குவரத்து, சுற்று லாத்துறை அமைச்சராகவும் நியமிக்கப் பட்டார்.
குமாரசிறி ரத்னாயக்கா, ஊவா மாகாணத்தின் சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்நடத்தை மகளிர் விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்கா ஊவா மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, மின்சாரம் புடவைக் கைத்தொழில், சிறுகைத்தொழில் மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar