ஹெல உறுமயவுடன் ஒத்துப் போக நாங்கள் தயார். ஆனால் ரத்ன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுரலியே ரத்ன தேரரின் புதிய அரசியல் முன்னெடுப்பு தொடர்பாக இன்று அவரிடம் வினவப்பட்டபோதே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் ஏதோ நித்திரையில் இருந்து எழுந்த பைத்தியக்காரன் போல பிதற்றிக் கொண்டிருக்கின்றார் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment