வரவு - செல்வு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு முன்னதாக ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் அவசர சட்டமூலமாக ரதன தேரரின் 19 வது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பிக்க தயாராவதாக இணையத் தளங்களில் செய்தி வெளிகியுள்ளது.
19 வது திருத்தத்திற்கு நாமும் ஆதரவளிக்கவுள்ளதால் அதனை சமர்ப்பிக்கும் முன்னர் ஐ.தே.க.வுடனும் பேசுவோம் என்றும் குறிப்பிட்டார்.
இதன் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. இல்லாத சட்டமூலமொன்று குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்புகிறார் அவ்வாறு ரதன தேரரின் சட்டமூலம் எதுவும் கிடையாது என்றார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த மனுஷ நாணயக்கார எம்.பி., தானே இணையத்த ளங்களில் செய்தி வெளியிட்டு விட்டு தானே கேள்வி கேட்பது தவறு என்றார்.
Post a Comment