BREAKING NEWS

கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்

KMFமுழு நிலவில் கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்; காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு!


புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள, கிழக்கு மாகாண முஸ்லீம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வு, எதிர்வரும் 07ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மறுநாள் 08ஆம் திகதி அதிகாலை 5.15 வரைக்கும் காத்தான்குடி கடற்கரையோரத்திலுள்ள ஜூமைறா பெலஸில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முழு நிலவில் நடைபெறவுள்ள இந்த ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் நிகழ்வில் உரையரங்கம், கவிதையரங்கம், நகைச்சுவை அரங்கம் போன்ற பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் பரிசில்கள மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்த ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் கடிதங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பான அழைப்பு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பபட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. அன்றைய தினம் அஸர் தொழுகைக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு சமூகம் தருமாறு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் கேட்டுக் கொள்வதாக செயலாளர் .ஜெலீஸ் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar