BREAKING NEWS

கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலையா?

 
அடியோடு மறுக்கிறார் முதல்வர் நிஸாம் காரியப்பர்!


கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலை நிறுவப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இது மக்கள் மத்தியில் பீதியையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை நகர பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இந்த சிலை வைப்பு விடயம் தொடர்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதாவது கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது விடயத்தில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலை நிறுவப்படவிருப்பதாக கூறப்படும் வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடையத் தேவை இல்லை என்றும் முதல்வர்- நிஸாம் காரியப்பர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar