BREAKING NEWS

பிச்சைக்காரர்களை தேடி தேடுதல் வேட்டை



பிள்ளைகளுடன் யாசக தொழிலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விஷேட சுற்றி வளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்திற்கு முன்னர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் காணாமல் போன ஆண் சிறுவர் ஒருவர் நேற்று முன்தினம் யாசகர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரத்தினபுரி கொடகதென  ஓபாத தோட்ட பிரதேசத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்ட பெண்; தொடர்பான பிரேத பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளன.

இந்தநிலையில், கூரிய ஆயுதத்தால் தலை பகுதி தாக்கப்பட்டே இந்த மனித கொலை இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கும், கொடகதென பிரதேசத்தில் முன்னர் இடம் பெற்ற கொலைக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar