BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் தனது சுக போகத்துக்காக முஸ்லிம்களை கறிiவுப்பிலையாக பாவித்து உருக்குலைத்துவிட்டார்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப காலத்தில் அதனை கடுமையாக ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். அத்துடன் இன்று அக்கட்சிகளில் இருப்போரில் 1989ம் ஆண்டு முதல் அக்கட்சியின் இணைப்பாளராக தலைவர் அஷ்ரபின் கையினால் நியமிக்கப்பட்டஇணைப்பாளன் என்ற வகையில் இதனை சொல்ல வேண்டியுள்ளது.

பேரின வாத கட்சிகளினால் வெறும் கறிவேப்பிலையாக முஸ்லிம் சசமூகம் பாவிக்கப்படும் யதார்த்தத்தை கண்டதனால்த்தான் நாம் மு. காவை பலமாக ஆதரித்தோம். முஸ்லிம் காங்கிரஸ் என்பது வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக இல்லாமல் சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கும் சமூக இயக்கமாகவே அதனை நான் உட்பட பலரும் பார்த்தோம்;. அந்த வகையிலேயே அக்கட்சியை வளர்த்தெடுக்க அரும்பணி புரிந்தேன். 1989 1991 வரையில் சஊதியில் இருந்த இலங்கை மக்கள் மத்தியல் மு. கா வை வளர்க்க எனது சொந்த பணத்தில் 50 வீதத்தை செலவு செய்தேன் என்பது அந்த கால கட்டத்தில் அங்கிருந்த நமது மக்கள் அறிவர்.
இத்தனையும் நான் செய்யக்காரணம் 13 வயது முதலே அல்லாமா மௌலானா மௌதூதியுடைய எழுத்துக்களினால் கவரப்பட்ட நான் அவர் சொல்வது போல் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியாக அல்லாமல் இஸ்லாத்துக்கான கட்சியாக இருக்க வேண்டும் என நான் மு காவை எதிர் பர்த்தேன்.  ஆனால் அக்கட்சி 1991 முதல் தனது பாதையை விட்டு தடம் புரள ஆரம்பித்தது. அதற்கு மேலாக 94ம் ஆண்டு தலைவர் அஷ்ரப் அமைச்சரானது முதல் முதலாளித்துவ கட்சியாக அது பரிணாமம் பெற்றது. கட்சிக்காக பாடுபட்டவர்கள் ஒதுக்கப்பட்டு அக்கட்சியை கடுமையாக எதிர்த்த ஐ தே க காரர்கள் அஷ்ரப் அமைச்சர் என்பதற்காக ஓடி வந்த போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சமூக சிந்தனையை விட எதனை சுருட்டலாம் என்ற உணர்வே 99 வீதமானோரிடம் இருந்தது.
இங்கு நான் முஹம்மது நபியவர்களை நினைத்தப்பார்க்கிறேன். அதன் போது என் கண்களில் நீர் சுரக்கிறது. அன்னார் பிறந்தது முதல் 53 வயது வரை வளர்ந்த, தனது மிகுந்த நேசத்துக்குரிய  மக்காவை 63 வயதில் கைப்பற்றியதும் அங்கேயே அவர்கள் குடியிருப்பார்கள் என பலரும் எதிர் பார்த்தனர். ஆனால் இஸ்லாத்துக்காக தமது உயிரை கொடுத்து போராடிய மதீனா மக்களுடன் இணைந்து மீண்டும் மதீனாவுக்கே சென்றார்கள். ஆனால் மு . கா புதிதாக கண்ட பணக்காரர்களையும், பழைய அதிகாரமுள்ளவர்களையும் தலையில் தூக்கி வைத்ததுடன் அக்கட்சிக்காக பாடுபட்ட ஏழைகளை ஒதுக்கித்தள்ளியது. இதன் ஒரு உதாரணம்தான் கட்சிக்கான தலைமையகம் கிழக்கு மாகாணத்தில் அமையாததாகும்.
அதே போல் எந்தக்காலத்திலும் எந்தவொரு கட்சியையும் பகிரங்கமாக ஆதரிக்காத கிழக்கு மாகாண உலமா சபைகள் முஸ்லிம் காங்கிரசை பகிரங்கமாக ஆதரித்தார்கள். எனினும் உலமாக்கள் அக்கட்சியினால் வெறும் கறிவேப்பிலைகளாக பாவிக்ப்பட்டது மாத்திரமின்றி முற்றாக ஒதுக்கப்பட்டார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம்தான் அமைச்சர் அஷ்ரப் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு மௌலவிக்கேனும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை என்பதாகும். அத்துடன் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சு இல்லாதொழிக்கப்பட்டதும் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளி கட்சியாக இருந்த காலத்தில்தான்.
ஆக பேரினவாத கட்சிகள் முஸ்லிம்களை கறிவேப்பிலையாக பாவித்ததை விட மிக மோசமாக முஸ்லிம் காங்கிரஸ் தனது சுக போகத்துக்காக முஸ்லிம்களை கறிiவுப்பிலையாக பாவித்து உருக்குலைத்துவிட்டார்கள் என்பதே உண்மையாகும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar