BREAKING NEWS

பொதுபல சேனாவுடன் பேச்சுவார்த்தைக்கு UNP?


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க அழைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தமது கட்சி பதிலளிக்க எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான டிலாந்த வித்தானகே, காலம் கடந்தேனும் ஐக்கிய தேசியக் கட்சி யதார்த்தத்தை புரிந்து கொண்டமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் தமது அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar