தவ்ஹீதுவாதிகள் தமது கருத்து வேறுபாடுகளுக்கப்பால் தவ்ஹீத்வாதி என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படும் போது பாரிய பல நன்மைகளை பெற முடியும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் செயலாளர்
மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்த அமர்விலேயே இவ்வாறு குறிப்பிட்டார் அவர் தொடந்து கூறியதாவது,
இலங்கை முஸ்லிம்களிடையே மூட நம்பிக்கைகளும், இணைவைப்புக்களும் மலிந்திருந்த போது குர்ஆன் ஹதீத் பற்றி அறிந்திருந்த உலமாக்களால் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. பாரிய சவால்களுக்கும், கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கொள்கைப்பற்றுக்காண்ட சகேதரர்களின் உறுதியான பற்றின் காரணமாக அதில் அவர்கள் வெற்றி கண்டார்கள். தவ்ஹீதின் பிரச்சாரம் நாடு முழுவதும் பரவியதையும் கண்டோம்.
ஆனால் சமீப காலமாக தவ்ஹீத்வாதிகள் மத்தியில் பாரிய கருத்து வேறூபாடுகளையும் ஒருவரை ஒருவர் காபிர் என்று சொல்லி ஒதுக்குமளவு வாத விவாதங்களும் ஏற்பட்டு தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமை சிதைக்கப்பட்டு வருவதை காண்கிறோம். இத்தகைய கருத்து வேறுபாடுகள் அடி தடி மோதலிலும் கொண்டு வந்து விட்டுள்ளதையும் நமது அடிப்படை பிரச்சாரம் வேறு திசைகளில் செல்வதையும் காண்கிறோம்.
இத்தகைய நிலையைக்கண்ணுற்றுதன் காரணமாகவும் தவ்Pத்வாதிகள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரே நோக்கம் காரணமாகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தவ்ஹீத்வாதிகள் ஒற்றுமைப்பட்டேயாக வேண்டும் என்ற கருத்தியலை முன்னெடுத்து செயற்பட்டு வருகிறோம். இதன் முழு நோக்கமும் யாரெல்லாம் தம்மை தவ்ஹீத்வாதிகளாக சொல்லிக்கொள்கிறார்களோ அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதேயாகும். அதாவது கருத்து வேறுபாடுள்ள விடயங்களை கருத்திற்கொள்ளாது கருத்தில் உடன் பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு நாம் ஒற்றுமைப்படுவதாகும்.
இந்த வகையில் நம் மத்தியில் உள்ள தவ்ஹீத் அமைப்புக்கள் அப்படியே இயங்கும் நிலையில் அவற்றை சேர்ந்தோர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பில் இணைவதன் மூலம் தவ்ஹீத்வாதிகளின் ஒற்றுமைக்கு உரமூட்டுவதாக அமையும். அதே போல் கருத்து வேறுபாடுள்ள விடயங்களை அக்கருத்து வேறுபாடுள்ள உலமாக்களையும் ஏனைய தவ்ஹீத் உலமாக்களையும் ஒரே மேடையில் பேச வைத்து அதன் பின் சகோதர வாஞ்சையுடன் கைகுலுக்கிச்செல்லும் வகையில் கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் உத்தேசித்துள்ளோம். இக்கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்வதை தவிர்த்து உலமாக்களும் தவ்ஹீத் பள்ளிவாயல்கள் தலைவர்கள் மாத்திரமே கலந்து கொள்வர். இத்தகைய செயற்பாடுகள் மூலம் எத்தகைய கருத்து வேற்றுமையிலும் நாம் தவ்ஹீத் சகோதரர்கள் என்ற ஒற்றுமையை ஏற்படுத்த முடியும என்ற நம்பி;க்கை நமக்குள்ளது. இத்தகைய அரும்பணிக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு முழு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு தவ்ஹீத் கூட்டமைப்புடன் நாம் அனைவரும் இணையும் போது பாரிய பல நன்மைகள் நமக்குக்கிடைக்கும். இறை வேதத்தில் ஒற்றுமைப்பட்டதற்கான இறையருள். உள்ளங்கள் மத்தியில் நெருக்கம், அன்பு, மூட நம்பிக்கைகளுக்கெதிரான நமது பிரச்சாரங்கள் மீண்டும் வலுப்பெறல், அரசியல் அதிகார பலத்தால் நமக்குக்கிடைக்க வேண்டிய வாழ்வாதார உரிமைகள், நமது எதிர்கால பரம்பரைகள் மத்தியில் அன்பு சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்படல் போன்ற நன்மைகளை பெற முடியும்.
ஆகவே இத்தகைய சிறந்த பணிக்காக இறைவனுக்காக என வாழும் தவ்ஹீத்வாதிகளின் முழு ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கிறோம். குர்ஆன் தூய ஹதீத் அடிப்படையிலான தவ்ஹீத் சகோரதரர்கள், சகோதரிகள் அனைவரும் இன்றே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் கூட்டமைப்பில் இணைந்து நமது ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்ற முன் வருமாறு அழைக்கின்றோம் என்றார். இக்கூட்டம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எஸ் எம் அக்பர் தலைமையில் நடைபெற்றது.

Post a Comment