BREAKING NEWS

''முஸ்லிம் கடை விவகாரம்'' சந்தேகங்களை ஏற்படுத்துகிறது

தம்புள்ளை முஸ்லிம் கடையொன்றில்  இடம்பெற்ற தனிப்பட்ட பிரச்சனையை இன ரீதியிலான பிரச்சனையாக மாற்றி பூதாகமாக்காதீர்கள். இதன்மூலம் அளுத்கமை சம்பவம் போன்று பாரிய விளைவுகளை ஏற்படலாம் என எச்சரிக்கைவிடுத்த மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதில் பொதுபலசேனா அமைப்பு மூக்கை நுளைத்ததை பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன என்றார்.


இதேவேளை தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு இனவாத சாயம் பூவதை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் இருக்குமாயில் எதிர் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு கூறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) மாலை தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடையொன்றுக்கு பெருள் கொள்வனவிற்காக வந்த வெ ளி பிரதேசத்து சிங்கள பெண் ஒருவருடன் மோசமாக நடந்துகொண்டார் என கூறப்படும் சம்பவத்தையடுத்து அங்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த பிரதேசத்தில பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலோயே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தம்புள்ளையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட பிரச்சனையாகும். அதனை இன ரீதியான பிரச்சனையாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். இதனை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

குறித்த பிரச்சனையில் பொதுபலசேனா தலையிட்டமையானது சம்பவத்தை பெரிதுபடுத்துவதற்கேயாகும். இந்நிலையில் ஆர்ப்பாட்டப்பேரணியும் கடையடைப்பும் இடம்பெற்றுள்ளது. இது பெரும் பிரச்சனையாக மாற்றினால் அரசாங்கமே பெறுப்பேற்கவேண்டும்.

அளுத்கமயிலும் பதுளையிலும் மேலும் பல இடங்களிலும் வியாபார நிலையங்களில் இடம்பெற்ற சம்பவத்தை காட்டி முஸ்லிம்களின் மீது கறைபூசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறான இனவாதசக்கதிகளை அரசு கட்டுப்படுத்தாதுள்ளது. 

இதன் தொடராக தம்புள்ளையிலும் இனவாத சாயம் புசப்பட்டு பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேச முஸ்லிம்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்றும் அவர்மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar