BREAKING NEWS

மூன்று மில்லியன் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி இம்முறை வெற்றியீட்டுவார்


எதிர்க்கட்சிகளிலிருந்து யார் ஜனாதிபதி வேட்பாளரானாலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று மில்லியன் மேலதிக வாக்குகளுடன் வெற்றி பெறுவது உறுதியென பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“எதிர்க்கட்சிகள் யாரை களமிறக்கி னாலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகூடிய மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார்” என்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 27 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த மேலதிக ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் 2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1.8 மில்லியன் களாக அதிகரித்தது.
இம்முறை நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதியவர்கள் மூன்று மில்லியன் வாக்குகளால் வெற்றி பெறுவாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” யெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கட்டான பிரதேச செயலாளர் பிரிவில் ஜனாதிபதி தேர்தல் அலுவலகம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“வெளிச் சக்திகள் தொடர்ந்தும் எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வருடங்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே எமக்கு அவசியம். அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே இந்த தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் அவர் தெரிவித்தார்.
“சிலர் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றனர். இவர்களுக்கு மக்களை பாதுகாக்கும் நோக்க மில்லை” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் “பொது மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பழக்க முடையவர்களும் பொய்ப்பிரசாரம் செய்பவர்களும் மேலைத்தேய நாடுகளின் ஒப்பந்தத்திற்கு உள்வாங்கப் பட்டுள்ளனர்” என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் நாட்டினை ஒரே கொடியின் கீழ் கொண்டு வந்ததையடுத்து மக்கள் அவர் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar