BREAKING NEWS

பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  பலர் கைது

இந்தியாவின் திருப்பதிக்கு விஜயம் செய்யும் இலங்கை பிரதமர் தி.மு. ஜயரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட முயற்சித்த மதிமுகவினர் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

திருத்தணியில் இருந்து மல்லை சத்யா தலைமையில் மதிமுவினர் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டனர்.
அப்போது மல்லை சத்யா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்ட 100க்கும் மேற்பட்ட மதிமுகவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இலங்கை பிரதமர் தி.மு. ஜயரத்ன நேற்று வெள்ளிக்கிழமை திருமலைக்கு செல்கிறார். இலங்கை பிரதமர் வந்து திரும்பும் வரை தேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு அகற்றும் படையினரும், மோப்ப நாய் பிரிவினரும், திருமலை பாதையில் நேற்று சோதனையில் ஈடுபட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar