கடந்த 2014.09.28 அன்று இறையடி சேர்ந்த மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ அவர்களின் நினைவுக் கூட்டம் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழத்தின் ஏற்பாட்டில் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நாளை 2014.11.07 பி.ப. 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நினைவுக் கூட்டத்தில் ஓய்வுநிலை அதிபர் எம்.எம்.எச். அப்துல் காதர், ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் ஆகியோர் உரையாற்றவுள்ளார்கள்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
Post a Comment