சிவில் விமான அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு முடிவெடுத்திருப்பதாக சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார். இன்று காலையில்
நடைபெற்ற அமைச்சுப்பொறுப்பை ஏற்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியல் ஊழலுக்கு மோசடிகளுக்கோ, குடும்ப ஆட்சிக்கோ பழிவாங்கலுக்கோ இடமிருக்காது. ஆனால் கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கான தண்டனை பெற்றுக்கொடுக்க தயங்க மாட்டோம்.
மக்கள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனாவுக்கு வாக்களித்திருப்பது நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கேயாகும். இதற்காக நான் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியை ஒதுக்க மாட்டோம். இன்றிருப்பது சகல கட்சிகளையும் கொண்ட தேசிய அரசாங்கமாகும் என கூறினார்.
மத்தள விமான நிலையம் மூடப்பட்டிரப்பது பற்றிய ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கையில்
மத்தள விமான நிலையம் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை மூடிவிடும்படி விமான சேவைகள் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விபரமும் எதிர் காலத்தில் பகிரங்கப்படுத்தப்படு; என்றார்.
அத்துடன் அமைச்சில் என்து உறவினர் எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.



Post a Comment