BREAKING NEWS

மு. கா, ம.கா ஆகிய இரண்டு கட்சிகளும் விச பாம்பின் இரு தலைகளாகும்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற இரு கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் சுயநல கூட்டத்தின் இரு கண்கள். ரஊப் ஹக்கீம் தலைமையேற்று இந்த 14 வருடங்களுள் சமூகம் பெற்ற நன்மை எதுவும் இல்லை என்பது சகலரும் அறிந்த விடயம். அதே போல்
அமைச்சர் ரிசாத் வன்னிக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமான அமைச்சர். இவரது கட்சியும் முழு நாட்டுக்குமுரியது என சொல்கிறார். ஆனால் இவரால் இவரது கட்சியால் ஏனைய முஸ்லிம்கள் பெற்ற சமூக நன்மை எதுவுமில்லை.
இவரது கட்சியின் செயலாளர் கல்முனையை சேர்ந்தவர். இருந்தும் அமைச்சர் ரிசாதினால் கல்முனையை சேர்ந்த செயலாளரின் குடும்பம் அல்லாத எத்தனை பேருக்கு அமைச்சர் தொழில் பெற்றுக்கொடுத்துள்ளார் என்று பட்டியலிட முடியுமா?

முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய ஹலால் பிரச்சினை, பள்ளியுடைப்பு, பேருவல போன்ற சம்பவங்களின் போது இவரும் ஹக்கீமை போன்று அசட்டையாகவே இருந்தார். பொதுபல சேனாவை குற்றம் சாட்டினாரே தவிர அதனை இயக்கிய அரசை இவர் குற்றம் சாட்டவில்லை.
ஆக மு. கா, ம.கா ஆகிய இரண்டு கட்சிகளும் விச பாம்பின் இரு தலைகளாகும். இந்தக்கட்சிகளை ஒரு முஸ்லிம் நம்ப முடியாது என்பதற்கு பல வருடங்கள் சாட்சியாக உள்ளன. ரஊப் ஹக்கீமை போன்று ரிசாதும் இப்போது தேர்தல் நெருங்குவதால் அம்பாரை மாவட்டத்துக்கு படை எடுக்கிறார். கடந்த கல்முனை மாநகர சபையில் இவரை நம்பி இவரது கட்சி சார்பில் பலர் ஆளுங்கட்சியில் போட்டியிட்டனர். ஆனால் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத முட்டாள் போன்று இவரும் இவரது செயலாளர் நாய்யகமும் சுதந்திர கட்சி வேட்பாளர்களான மருதமுனை ரஹ்மான்  கல்முனை ரியாஸ் போன்றோரின் மேடைகளில் ஏறி அவர்களுக்காக பிரச்சாரம் செய்து தமது கட்சி வேட்பாளர்களை தோல்வியடைய வழி செய்தனர். இத்தகைய சுயநல ஏமாற்று கட்சிகளை நாம் நம்ப முடியாது. உள்ளுர் மாப்பிளை முடவனாக இரந்தாலும்  அவன் மேல் என்பதற்கேற்ப கிழக்கு தலைமையை கொண்ட முஸ்லிம் மக்கள் கட்சியை முஸ்லிம்கள் ஆதரிப்பதே சிறந்த வழி. அந்த வகையில் கல்முனை தலைமையை கொண்ட உலமா கட்சியில் கிழக்கு மக்கள் குறிப்பாக கல்முனை முஸ்லிம்கள் ஒன்று சேர்வதன் மூலம் நிச்சயம் நல்லதொரு கட்சியை பலப்படுத்தி அதன் மூலம் சாதிக்க முடியும்.
மௌலவி முஸம்மில்
கொள்கை பரப்பு செயலர்
முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar