BREAKING NEWS

பைசர் முஸ்தபா மீண்டும் அமைச்சு பதவியை பெறவேண்டும் என சுதந்திர கட்சி முஸ்லிம் பிரிவு கோரிக்கை


அஸ்ரப் ஏ சமத்
ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் யுனிட்   இன்று கொழும்பு ஹோட்டல் ரமதாவில் ஊடகவியலாயளர் மாநாடு
இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபாவை மீண்டும்
ஜனாதிபதி மைத்திரி கொடுக்க இருக்கின்ற சுற்றாடல் அமைச்சையாவது பாரமெடுங்கள் என அவருக்கு ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் யுனிட் அழுத்தம் கொடுக்கின்றது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எம். மன்சில், குருநாகல் நகர சபை உறுப்பிணர் அப்துல். சத்தார்  மற்றும் கொலாநவை நகர சபை உறுப்பிணரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் - இந்த நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் 140க்கும் மேற்பட்ட பிரதேச நகர சபை உறுப்பிணர் உள்ளனர், 3 பாராளுமன்ற உறுப்பினர் உள்ளனர். 10 மாகாணசபை உறுப்பிணர் உள்ளனர். 10 சபைகளின் தலைவர்கள் உள்ளனர்.  ஆனால் எமது ஸ்ரீ.ல.சு.கட்சியின் முஸ்லீம் யுணிட் தலைவராக 2 வருடங்கள்  பைசர் முஸ்தபா பதவி வகித்தவர் அவருக்கு இராஜாங்க அமைச்சு கொடுக்கப்பட்டது. அதனை அமைச்சர் அர்ஜ}ன ரணதுங்கவுக்கு கபிணட் அமைச்சராக அவரது நிறுவனங்கள் கெசட் பண்ணப்பட்டுள்ளது. அதில் இருந்தே அவர் இப் பதவியில் இருந்து வெளியேறினார். அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்ற பிரதிநிதி வரிசையில் எமது முஸ்லீம் யுணிட் பிரநிதி செல்ல வில்லை.
கடந்த காலங்களில் 90 வீதமான முஸ்லீம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களிக்கவே முடிவு செய்திருந்தனர். அதன் பின்னரே ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், மற்றும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து சிறந்த அமைச்சுக்களை எடுத்துள்ளனர். தம்புல்லை பள்ளிவாசல் பிரச்சினை அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் நகர அபிவிருத்திக்குள் வருகின்றது. இவ்விடயம் சம்பந்தமாக அவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் இறுதிவரை மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு தெரிவித்து வந்தோம். ஆனால் பிரதியமைச்சர் பைசர் தேர்தலுக்கு முன்பே அவர் மைத்திரியுடன் இணைந்து கொண்டவர்.
முஸ்லீம் யுணிட்டை அவரின் தலைமையிலும் கொண்டு செல்வதற்கு அவர் கட்டாயம் மீள இராஜங்க அமைச்சை பாரம் எடுத்து அதனுடாக சேவை செய்ய வேண்டும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar