BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரஸ் தனது பெயரை முனாபிக் காங்கிரஸ் என மாற்ற வேண்டும் -கலாபூசனம் லியாவுல் பன்னான் அல்ஹாஜ் எம் பி எம் ஹ{சைன் பாறூக்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரச்சினை போன்ற விடயங்களில் முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடுகள் குறித்து அல்ஜஸீறா லங்கா பொது மக்கள் கருத்துக்களை கேட்டு வருகிறது.
அந்த வகையில் ஸ்ரீலங்கா ஊடக நலன்புரி அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் கலாபூசனம் லியாவுல் பன்னான் அல்ஹாஜ் எம் பி எம் ஹ{சைன் பாறூக் அவர்களிடம் கேட்ட போது பின்வருமாறு தெரிவித்தார். “முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஆரம்பிக்கப்படு முன் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இந்த நாட்டு தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இதன் காரணமாக முஸ்லிம்கள் பல உரிமைகளையும் சலுகைகளையும் அரசாங்கங்களிடமிருந்து பெற்று தந்தார்கள். இது விடயத்தில் ஏ. அஸீஸ், சேர் ராசிக் பரீத், அல்ஹாஜ் கலீல், பதியுதீன் மஹ்மூத், எம் எச் முஹம்மத் போன்றோர் சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் வருகைக்குப்பின் அவர்களது சுயநலன் சார்ந்த செயற்பாடுகளின் காரணமாக முஸ்லிம்கள் பற்றி பல தப்பபிப்பிராயங்கள் உருவாகியுள்ளதாகவே நான் உரையாடும் மக்கள் எனக்கு சொல்கின்றனர். நேரத்துக்கொரு கருத்தும் பதவிகளுக்காக நயவஞ்சகமாக செய்ற்படுவதும்  பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் காரணமாகவே பொது பல சேனாவும் உருவாகியது.
ஆகவே முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் பெயரில் உள்ள முஸ்லிம் என்பதை எடுக்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் கோரிக்கையாக உள்ளது.  அல்லது தமது கட்சியின் பெயரை முனாபிக் காங்கிரஸ் என மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar