BREAKING NEWS

front Line சஞ்சிகையை விடுவிக்க சுங்க திணைக்களத்துக்கு பிரதமர் ரணில் உத்தரவு


சுங்க திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘புரொன்ட்லைன்’ சஞ்சிகையை விடுவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
‘front Line’ சஞ்சிகையின் 30 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள
மலரையே இவ்வாறு சுங்க திணைக்களம் தடுத்து வைத்துள்ளது. இந்த மலரில் கடந்த 30 ஆண்டு காலத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணல்கள் பலவற்றை பிரசுரித்துள்ளதுடன் சிறப்புக் கட்டுரைகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றும் மீள் பிரசுரமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த சஞ்சிகையை சுங்க திணைக்களம் தடுத்து வைத்துள்ளது.
இந்த கட்டுரை மீள பிரசுரமாகியுள்ளதால் தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலோ அழுத்தங்களோ ஏற்படாது என்ற காரணத்தினாலேயே இந்த சஞ்சிகையை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இவ்வாறான குழு நிலைமை உருவானால் இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சிட் ஆலோசனை பெற்று செயற்படுமாறும் பிரதமர் சுங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar