BREAKING NEWS

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு  எதிராக இன்று வியாழக்கிழமை (06) இலஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை  புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிகின்றது.

இம் முறைப்பாடு தொடர்பில்  அவசரமாகவும் துரிதமாகவும் விசாரணைகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு இந்த முடிவுகளை முன்வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவ் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டள்ளார்.

அத்துடன் அவ் விசாரணைக்காக  தான் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீpலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியிடைந்த   ஒருவரினாலேயே இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.ர்.ஆ.டீழழஅரனநநn

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar