BREAKING NEWS

ஐக்கிய தேசி கட்சி அரசாங்கம் ஆட்டம் காணுகிறது. ரஜPவ விஜயசிங்க எதிர்க்கட்சியில் இணைந்தார்


முன்னாள் உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜயசிங்க நேற்று எதிர்த் தரப்பில் இணைந்து கொண்டார். பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் தான் சுயாதீன எம்.பியாக செயற்படப் போவதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் கூடியது. இதன்போது தனிநபர் அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் ஆளும் தரப்பில் இருந்து எதிர்த்தரப்பிற்கு சென்று அமர்ந்தார். இதன்போது எதிர்தரப்பு எம்.பிக்கள் மேசையில் தட்டி தமது ஆதரவை வெளியிட்டனர்.
இங்கு உரையாற்றிய அவர் தான் வகித்த உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து எம்.பியாக செயற்படுவதாக குறிப்பிட்டார். நல்லாட்சி ஏற்படுத்துவதற்காக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், தான் பதவி விலகிய பின் அரசாங்கம் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar