மஹிந்தவின் பதவி க்காலம் பெரும்பாலான மக்களுக்குத் தொந்தரவாகவே அமைந்தது என்றும் அவர் கூறியுள்ளார். கடுவெலை நகராதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
30 வருட யுத்தத்தை அவர் முடித்தமை உண்மையாகும். சுதந்திரமாக நாம் வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. அதனால்தான் இருமுறை நாம் அவருக்கு அதிகாரம் வழங்கினோம்.
ஆனாலும் அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருப்பதால் எதிர்ப்பு மேலோங்கும் பெருமளவு வீண்விரயமும், ஊழலுமே அதிகம் ஏற்பட்டது.
மேலும் இரு ஆண்டுகள் ஆட்சி நடத்த அதிகாரம் இருந்தும் தந்திரமாக மக்களை ஏமாற்றி மேலும் ஆறு வருடங்கள் எடுக்கும் தேர்தலை நடத்தி அவர் தோல்வி கண்டதாகவும் நகராதிபதி புத்ததாச இம்மாநாட்டில் தெரிவித்தார்.
Post a Comment