ஆதம் நபி இந்தியாவில் இறங்கினார் என்பதற்கு பலவீனமான ஹதீஸ் உண்டு. இந்த ஹதீத் பலவீனம் என சொல்லப்படுவதற்கு அதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள பலவீனமே தவிர கருத்தில் அல்ல. ஆசியாவிலேயே மனிதனின் முதல் வரலாறு ஆரம்பமாகியுள்ளது என வரலாற்றாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். ஒரு பலவீனமான ஹதீதை வணக்க வழிபாடுகளில் தவிர்க்கலாம். ஆனால் வரலாற்றில் ஏற்கலாம். அத்துடன் ஆதம் இலங்கையில் இறங்கியதாக இஸ்ராயிலிய்யாத் கதைகளும் சொல்;கின்றன. இஸ்ராயிலிய்யாத்தை உண்மை படுத்தவும் வேண்டாம், பொய்யாக்கவும் வேண்டாம் என நபிகளார் (சல்) சொல்லியுள்ளார்கள். அன்றைய அறபு நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஆதம் மலையை தரிசித்துள்ளார்கள். ஆதம் நபி அறபு நாட்டில் இறங்கினார் என சொல்லி பெருமைபடாமல் இலங்கையில் இறங்கினார் என்ற வழி வழி வந்த வரலாற்றை அவர்கள் நம்பினார்கள். இதில் இப்னு பதூதாவின் இலங்கை வரலாறு மிக முக்கியமானது. அவர் ஆதம் மலையை தரிசிக்கவென்றே இங்கு வந்தார். ஆக இலங்iயில் இறங்கியது பொய் என்று சொல்லவும் முடியாது என்பதை நபிகளார் சொல் நமக்கு உணர்த்துகிறது. பலவீனமாக இருந்தாலும் நபிகளாரின் அறிவிப்பு வரலாற்று தடயங்கள் மூலம் உண்மையாகிறது.
-முபாறக் அப்துல் மஜீத்
Post a Comment