BREAKING NEWS

அரசு தோற்கடிக்கப்பட்டது

அரசு பதவி விலக வேண்டும்
 

நிதி சார்ந்த பிரேரணை தோற்க டிக்கப்பட்டுள்ள தால் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்று தெரிவித்தார்.
திறைசேரி உண்டியல் தொடர்பான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விசேட ஊடக மாநாட்டில் கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த ஊடக மாநாட்டில் வாசுதேவ நாணயக்கார, கீதாஞ்சன குணவர்தன, சரத் குணவர்தன, வை.ஜீ. பத்மசிறி, ஜனக பண்டார, மனுஷ நாணயக்கார, ஸ்ரீயாணி விஜேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
400 பில்லியன் ரூபா கடன் பெறும் பிரேரணையை பாராளுமன்றம் நிராகரித்துள்ளது. நிதி தொடர்பான பிரேரணை தோற்றால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். நிதி அமைச்சர் கூட வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. பல ஐ.தே.க. உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே இதனை தோற்கடித்துள்ளனர். இது ஐ.ம.சு.மு. கொள்கைக்கு முரணானது எதிர்க்கட்சி தந்திரோபாயமாக இந்த முடிவை எடுத்தது ஐ.ம.சு.மு. பாராளுமன்ற குழு கூடி இந்தப் பிரேரணை குறித்து முடிவு செய்யாததால் எமது எம்.பிகள் விரும்பியபடி வாக்களித்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar