BREAKING NEWS

மைத்திரி சிறிசேன இழிவான நபர், ரணில் பிக்பொக்கட் அடித்தவர் - பேராசிரியர் நளின் டி சில்வா



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பில்லாதவர்கள் இருப்பதாகவும் அந்த கட்சியை சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 27.04.2015  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த திருத்தச் சட்டம் ஜனநாயக போர்வையில் கொண்டு வரப்படும் சிங்கள விரோத சர்வாதிகார திருத்தமாகும்.

19வது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவுபடும். அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி அதன் தலைவராக மாறுவார்.

பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றார்.

நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும் என அவர் தற்போது கூறி வருகின்றார்.

மைத்திரிபால சிறிசேன இழிவான நபர். இவரை போன்று மேற்குலகத்திற்கு தேவையான வகையில் செயற்படும் வேறு நபர்கள் நாட்டில் இல்லை.

அதேவேளை ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை பிக்பொக்கட் அடித்தவர். டி.எம். ஜயரத்னவே இன்றும் நாட்டில் சட்டரீதியான பிரதமர்.

மேலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேரணி சென்றவர்கள் நாட்டில் இருக்கும் சிங்கள புலிகள். மாதுளுவாவே சோபித தேரர் தற்போது சிங்கள விரோதியாக மாறிவிட்டார் எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar