BREAKING NEWS

வேட்பாளர்களிடமிருந்து சு. க. ஜூன் 05வரை விண்ணப்பம் ஏற்பு


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல் என்பவற்றிற்காக வேட்பாளர்களிட மிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விண்ணப்பம் கோரியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 5 வரை ஏற்கப்பட உள்ளதோடு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 10 வரை ஏற்கப்பட இருப்பதாக சு. க. செயலாளர் நாயகம் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ள அவர் எம்.பி.கள் அமைப்பாளர்கள் தவிர வேறு ஆர்வமுள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar