சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கல்முனை சாஹிபு வீதியை காப்பட் இடுவதாக கூறி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் படி மேற்படி வீதியன் பழைய அமைப்பு முற்றாக தோண்டப்பட்டு பின்னர் அந்த நிலையிலேN ய கைவிடப்பட்டது. இதன் காரணமாக அந்தி வீதி மக்கள் பாரிய பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததுடன் வாகனங்கள் செல்ல முடியாமலும் சென்றால் டயர் சேதமடையும் நிலையும் காணப்பட்டது.
மேற்படி வீதியின் நிலை பற்றி உலமா கட்சி அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தது. இதனை திருத்துவதற்காக அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மேற்படி வீதியில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலை வரும் என நாம் எச்சரித்தோம். இறுதியல் தற்போது மேற்படி வீதியின் திருத்த வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வீதி முழுமையாக திருத்தப்படும் வரை அது பற்றி உலமா கட்சி அவதானமாக இருக்கும்.
கல்முனையின் அபிவிருத்திக்காக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவினால் 250 கோடி ரூபா திதுலன அபிவிருத்தி எனும் பெயால் கல்முனை முஸ்லிம் காங்கிரஸ் எம் பி ஹரீசிடம் வழங்கப்பட்டது. இது பற்றி அவரே பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்தப்பணம் கல்முனை தேர்தல் தொகுதியில் சரிவர, நியாயமாக பாவிக்கப்படவில்லை என்பதை உலமா கட்சி மட்டுமே சுட்டிக்காட்டி வந்தது. சாஹிபு வீதியின்; முதற்கட்ட வேலை ஆரம்பிக்கப்பட்டு இடைநடவில் கைவிடப்பட்டதன் காரணம் ஊழலா அல்லது வேறு ஏதும் காரணமா என்பதை அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்து 3 மாதம் தாண்டியும் சும்மா கிடந்த இவ்வீதி மீண்டும் திருத்தப்படுகிறது என்றால் இதற்குரிய பணம் இந்த ஐ தே க அரசாங்கம் வழங்கியதா? இல்லையாயின் முன்னாள் அமைச்சர் பெசில் வழங்கிய பணம் உரிய முறையில் செலவு செய்யப்படாமல் இது வரை மறைக்கப்பட்டதா? தற்போது பெசில் உள்ளே இருப்பதால் அவற்றை சொல்லி விடுவார் என்ற அச்சத்தில் அதன் வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? இவை பற்றிய முழு விபரத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் கல்முனை மேயர் நிசாம் காரியப்பர், கல்முனையை ஆட்சி செய்யும் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் பகிரங்கமாக பொது மக்களுக்கு தெரிவிப்பதுடன் 250 கோடிக்குரிய வரவு செலவு அறிக்கையையும் பகிரங்கமாக வழங்க வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

Post a Comment