அண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த தவ்ஹீத் பிரச்சாரகர் கோவை அய்யூப் அவர்கள் பல ஊர்களிலும் சிறந்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால் அவரை கிழக்கு மாகாணத்தில் முதலில் தவ்ஹீத் அறிமுகமான கல்முனை தேர்தல் தொகுதிக்குள் உள்ள எந்தவொரு ஊருக்கும் அழைத்து வர முடியாத அளவு இப்பகுதி தவ்ஹீத்வாதிகள் அரசியல் அதிகாரமற்ற அனாதைகளாக உள்ளனர். இவரை அழைத்து வர முடியாமைக்கு காரணம் தவ்ஹீதை எதிர்ப்போர் தமது அரசியல் பலம் மூலம் இதற்கு தடையை ஏற்படுத்தியுள்ளனர். இத்தனைக்கும் இதற்கு துணை போகும் கப்று வணங்கிகள் ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கே கல்முனைத்தொகுதி தவ்ஹீத்வாதிகளும் இது வரை வாக்களித்து வருகின்றனர்.
கடந்த சந்திரிக்கா ஆட்சியில் பீஜேயை கல்முனைக்கு கொண்டு வர தவ்ஹீத்வாதிகளால் முயற்சி எடுக்கப்பட்ட போது கப்று வணங்கிகள் ஊரின் அரசியல்வாதிகளை பிடித்து அலவி மௌலானா மூலம் அவரை கல்முனைக்கு வர விடாமல் தடுத்தனர். அதன் பின் இந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பிப்போம் என கூறிய தவ்ஹீத்வாதிகள் தேர்தலில் போட்டியிடப்போகிறோம் என கூறினர். ஆனாலும் யாரும் முன்வரவில்லை. அந்த சூழ் நிலையில் இன்றைய உலமா கட்சியின் தலைவரும் ஆரம்ப கால தவ்ஹீத் போராளியுமான முபாறக் அப்துல் மஜீத் மௌலவி அவர்கள் துணிச்சலுடன் 2004 பொதுத்தேர்தலில் குதித்தார். ஆனாலும் இவரை ஆதரிக்க மறுத்த தவ்ஹீத் வாதிகள் அவரை விடுத்து அதாவுள்ளா, ஹக்கீம், பேரியல், ஹரீஸ் போன்றவர்களுக்கே தவ்ஹீத்வாதிகளில் நூற்றுக்கு 99 வீதமானோர் வாக்களித்தனர். இவர்களுக்கு வாக்களித்து தவ்ஹீத்வாதிகள் பெற்ற நன்மை ஒன்றை கூற முடியுமா?
அதன் பின்னர் மஹிந்த காலம் வந்தது. அதில் கூட கோவை அய்ய+பை கல்முனைக்கு அழைத்து வர முடியவில்லை. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்ட சில கல்முனைக்குடி தவ்ஹத் சகோதரர்கள் 2010 கல்முனை மாநகர சபை தேர்தலில் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவியை தவ்ஹீத்வாதிகள் சார்பில் போட்டியிடும்படி வேண்டிக்கொண்டனர். முதலில் அவர் மறுத்து வேறு யாரும் முன் வந்தால் அதற்கு தான் உதவுவதாக கூறினார். அனாலும் அவர்கள் அதற்கு உடன்படாததால் அவர் போட்டியிட்டார். இந்நிiயிலும் தவ்ஹீத்வாதிகளில் பெரும் பாலோர் அவருக்கு வாக்களிக்காமல் முபாறக் மௌலவியை தோற்கடிக்க வேண்டும் என தந்திரமாய் ஹரீசினால் நிறுத்தப்பட்ட மௌலவியின் உறவினர் ஒருவருக்கும், இன்னும் பலர் கொடியேற்றப்பள்ளிக்கு துணை போகும் நிசாம் காரியப்பருக்கும் வாக்களித்து தவ்ஹீத்வாதிகளின் பிரதிநிதித்துவம் கல்முனையில் உருவாவாதை தடுத்தனர்.
தற்போது மைத்திரியின் ஆட்சியிலும் கோவை அய்யுப் வந்தும் இவர்கள் வாக்குகளின் மூலம் எம்பியான ஹரீஸ், இவர்களின் வாக்குகளால் மாகாண சபை உறுப்பினரான ஜமீல், இவர்களின் வாக்குகளால் உறுப்பினரான மேயர் நிசாம் போன்ற அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகள் யாரும் கோவை அய்யூபை கல்முனைக்கு கொண்டு வர உதவவில்லை. மாறாக தடைக்கு துணை போயுள்ளனர். இதன் மூலம் கல்முனைத்தொகுதி தவ்ஹீத்வாதிகள் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. இவர்கள் தவ்ஹீதின் ஆரம்ப போராளியான உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதுக்கு வாக்களித்து அவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியிருந்தால் இந்த விளைவுகளை இறையுதவியால் தவிர்த்திருக்க முடியும் என்பதுடன் கப்று வணங்கிகளுக்கு துணை போகும் மேற்படி அரசியல்வாதிகள் அச்சமுற்றிருப்பார்கள்.
ஆகவே இதனை ஒரு பாடமாக கொண்டு கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை தவ்ஹீத்வாதிகள் உட்பட அம்பாரை மாவட்டத்தின் அனைத்து தவ்ஹீத்வாதிகளும் உலமா கட்சியுடன் இணைந்து தவ்ஹீத்வாதிகளுக்கான அரசியல் சக்தியை உருவாக்க எம்முடன் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் தவ்ஹீத்வாதிகளின் தொழில் பிரச்சினை, தஃவா முட்டுக்கட்டைகள் போன்ற பிரச்சினைகளை மிக இலகுவாக தீர்க்க முடியும். அரசியல் அதிகாரம் இன்றி இவற்றை தீர்க்க முடியாது என்பது அறிவுள்ளோருக்கு புரியும். அத்துடன் கிழக்கு தலைமையை கொண்ட உலமா கட்சிக்கு அம்பாரை மாவட்ட தவ்ஹீத்வாதிகளின் வாக்குகள் கிடைக்கும் பட்சத்தில் கோவை அய்யூப் போன்ற தவ்ஹீத் பிரச்சாரகர்களை கல்முனை போன்ற இடங்களுக்கு மிக இலகுவாக கொண்டு வர முடியும். ஆகவே தவ்ஹீத்வாதிகள் இனியாவது விழிப்பு பெற்று எமது கட்சியில் இணையும்படி அன்பாக அழைப்பு விடுக்கின்றோம். அவ்வாறு எம்முடன் இணைய விரும்புபவர்கள் தமது பெயர் முகவரிகளை 0777570639 என்ற இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்பி அரசியலில் தவ்ஹீத் பிரதிநிதித்துவத்தை பெற உதவும்படி அழைப்பு விடுக்கின்றோம்.
மௌலவி பத்ருத்தீன் கபூரி
செயலாளர்
Post a Comment