BREAKING NEWS

“நான் எந்தப் பதவி கேட்டும், போகப் போவதில்லை” மஹிந்த ராஜபக்ஷ


“நான் எந்தப் பதவியும் கேட்டுப் போகப் போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு வருகை தந்திருந்த அவரிடம் பிரதமர் வேட்பாளர் குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் வேட்பாளர் குறித்து பேசப்பட்டதாக கூறிய அவர், பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதென்றோ தோல்வியடைந்ததென்றோ இப்பொழுது கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட அவர்,

ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 5 அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பிக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் இரு தரப்பிற்கும் விடுத்த கோரிக்கையை யடுத்தே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இரு தரப்பும் தொடர்ந்து பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்

உள்ளூராட்சி சபைகளின் காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை ஒரு வருட காலம் வரை நீடிக்க முடியும்.

உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்குமாறே கோருகிறோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைப்பதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கொழும்பில் ஒன்றுகூட உள்ளனர்.

பந்துல குணவர்தன எம்.பி. :-

இதேவேளை ஜனாதிபதி மைத்திரி பாலவிற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிடையிலான சந்திப்பு குறித்து நேற்று அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன எம்.பி.,

பிரதமர் வேட்பாளரை பெயரிட முடியாது. என ஜனாதிபதி கூறியதாக சில ஊடகங்கள் தெரிவித்திருந்த செய்தி தவறானது. இருதரப்பு சந்திப்பிற்கு முன்னர் சுசில் பிரேம் ஜெயந்தின் வீட்டில் நடந்த சந்திப்பில் பேச வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் இன்றி இரு தரப்பும் தொடர்ந்து பேச உடன்பாடு காணப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar