5 மணி நேரம் பேச்சு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் தேசிய ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கும் இடையில் ஐந்து மணித்தியாலங்களாக விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.இந்த கலந்துரையாடல் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியின் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வார்ட்டில் இடம்பெற்றதாக அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.
திவிநெகும நிதி மோசடி தொடர்பாக கொழும்பு நிதி மோசடி பிரிவினால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு கடுவெல நீதிவான் முன் ஆஜர்படுத் தப்பட்டார். அவரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு நீத வான் உத்தரவிட்டார் பின் சுகவீன முற்ற அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரும் பசில் ராஜபக்ஷவும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டது ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியில் கம்பஹா மாவட்டத்திலாகும்.
இவ்வாறு ஒரே கட்சியில் ஒரே மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெவ்வேறாக செயற்பட்ட இவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரையாடியது என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆராயத் தொடங்கி யுள்ளது.
Post a Comment