இரட்டை வாக்குச்சீட்டு முறையை தொடர்ந்தும் வலியுறுத்துவதற்குத் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வாக் குறுதிகளை நிறைவேற்று வதை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
சிறுபான்மைக் கட்சிகள் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் மனோ கணேசன், சகல தொகுதிகளுக்கும் எம்பிக்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் முறுசீரமைப்புக்கு சிறுபான்மைக் கட்சிகள் முழு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.இரட்டை வாக்குச்சீட்டு முறை அறிமுகப்படுத் தப்படவேண்டும் என்ற யோசனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றே நாம் கேட்கின் றோம்.
இதன் மூலம் ஒரு வாக்காளர் தனக்கு விருப்பமான வேட்பாளரையும், விருப்பமான கட்சியையும் தெரிவுசெய்ய முடியும். வேட் பாளருக்கு அளிக்கப்படும் வாக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்வ தற்கும், கட்சிக்கு அளிக்கப்படும் வாக்கு தேசிய ரீதியில் கட்சி சார்பில் ஒருவரைத் தெரிவுசெய்வதற்கும் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் வாக்காளர்கள் நிம்மதியாகத் தமக்கு விரும்பிய ஒரு வேட்பாளரைத் தெரிவுசெய்ய முடியும். இந்த நடைமுறையானது தேர்தல் முறைக்கு மேலும் பலம்சேர்க்கும் வகையில் அமையும். அது மாத்திரமன்றி ஜனாதிபதியின் தேர்தல் மறுசீரமைப்புக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையிலும் இது அமையும் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஜனநாயகத்துக்கு சிறிய கட்சிகள் மிகவும் அவசியமானவை. எனவேதான் உத்தேச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் இரட்டை வாக்குச்சீட்டு முறையை உள்ளடக்குமாறு கோருகின்றோம். இரட்டை வாக்குச்சீட்டு முறை இல்லாத 20ஆவது திருத்தச்சட்டமூலகத்துக்கு ஆதரவளிக்காதிருக்க நாம் தீர்மானித்துள்ளோம். இரட்டை வாக்குச்சீட்டு முறைமையைக் கோருவது சிறுபான்மைக் கட்சிகள் என்ற கருத்து பிழையானது. தேசிய அரசியலில் உள்ள மாற்றுக்கட்சிகள் பலவும் இந்த யோச னையுடன் இணங்கியுள்ளன.
இந்த யோசனைக்கு பல்வேறு சிவில் சமூக அமைப்புக்கள் பல தமது ஆதரவை வழங்கிவருகின்றன. நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத், எல்.எல்.எஸ்.பி எம்.பி திஸ்ஸ வித்தாரண, சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த ஆனந்த மாமடுவ ஆகியோரும் இந்த யோசனைக்குத் தமது இணக்கத்தைத் தெரிவித்துள்ளனர்.
சகல தொகுதிகளுக்கும் எம்.பிக்களைத் தெரிவுசெய்வது மற்றும் தற்பொழுதுள்ள விருப்பு வாக்கு முறைக்குப் பதிலாக இரட்டை வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது கடினமான இலக்கு அல்ல. இதனை செயற்படுத் துவதற்கு வெளிநாடுகளின் மூளைகளும் அவசியமில்லை. உள்நாட்டில் உள்ள துறைசார் வல்லுனர்களைக் கொண்டு இதனை நடைமு றைக்குக் கொண்டுவர முடியும். சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் இந்த நிலைப்பாடு தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரசாரங்களை சிவில் மற்றும் அரசியல் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
Post a Comment