BREAKING NEWS

உலமா கட்சி சொன்னதை உண்மை படுத்துகிறார் சித்தீக் காரியப்பர்

கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீருக்கு நான் விடுக்கும் சவால்
தோற்றால் தூக்கியெறிவேன் எனது எழுத்துத் துறை பணியை!
--------------------------------------------------------------------------------------
கிழக்கு மாகாண முதலமைச்சரே நீங்கள் ஒரு தன்மானமிக்க முஸ்லிம் அரசியல்வாதியாக இருந்தால்..முஸ்லிம் காங்கிரஸின் தன்மானத்தைக் காக்கும் ஒருவராக இருந்தால் மாகாண முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜிமானா செய்ய வேண்டும்.
நீங்கள் இன்று ஒரு கையாலாகாத முதலமைச்சராக உள்ளீர்கள். நீங்கள் முதலமைச்சரே பதவியேற்ற பின்னர் செய்து காட்டிய சாதனைப் பட்டியலை இரண்டு அங்குலத்துக்கேனும் நீட்டிக் காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது.
நான் பல விடயங்களை இன்ஷா நாளை அல்லது நானை மறுதினம் அம்பலப்படுத்தவுள்ளேன். நான் உங்களிடம் கேட்கும் சில கேள்விகளுக்கு ஆதாரத்துடன் நீங்கள் பதில் தந்தால். நான் நாளையே எழுத்துத் துறையிலிருந்து விடைபெறுவேன். நிச்சயம்.. நிச்சயம்.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் வெறும் பொம்மையாக இருப்பதாகவும் அவரால் கிழக்கை நிர்வகிக்க முடியவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குக்கு பொருத்தமில்லை என்றும் அண்மையில் உலமா கட்சித்தலைவர் குறிப்பிட்டிருந்தார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar