வில்பத்துவில் இடம்பெற்றுள்ள காடழிப்பை, எனது இரு கண்களாலும் கண்டேன் - மைத்திரி
எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது வர்த்தகரோ, காடழிப்பு மேற்கொள்வதற்கு எனது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, பொலன்னறுவ, மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சுற்றாடலைப் பாதுகாப்பதன் ஊடாகவே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அது அனைவரதும் கடமையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வில்பத்துவில் இடம்பெற்றுள்ள காடழிப்பை நான் எனது இரு கண்களாலும் கண்டேன். தெற்கில் விமான நிலையம் அமைப்பதற்காக பறவைகள் சரணாலயங்கள் அழிக்கப்பட்டன. விமானங்கள் பறக்க வேண்டுமென்பதற்காக ஆயிரக்கணக்கான மயில்கள் கொல்லப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு என்னுடைய ஆட்சியில் இனி ஒருபோதும் இடமில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான மக்கள் தொகை அடர்த்தியொன்று தற்போது இந்த நாட்டில் இல்லை. யுத்தம் நிலவிய வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 20 சதவீமான மக்கள் தொகை அடர்த்தி காணப்படுகின்றது என்றும் கூறிய ஜனாதிபதி, சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக எதிர்வரும் நாட்களில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்று மேலும் கூறினார்.

Post a Comment