BREAKING NEWS

வில்பத்தை வைத்து சரிந்த செல்வாக்கை நிவர்த்தி செய்ய முனையும் அமைச்சர் றிஸாத்.




அமைச்சர் றிஸாத் பதியுதீன் தனது சரிந்த செல்வாக்கை மீளக்கட்டியெழுப்புவதற்காக வேண்டி வில்பத்து சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம்  தேடிவருகிறார் என தமிழ் - முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் இப்றான்சா பௌமி தெரிவித்தார்.

இக்கூட்டமைப்பின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி அவர்களின் இல்லத்தில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,வில்பத்து பிரச்சினையை அமைச்சர் றிஸாத் பெரிது படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் தன்னை ஒரு 

தேசியத் தலைவராக இனங்;காட்ட முனைகின்றார் என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள  உண்மையாகும். பிரச்சினைகளை தானாகவே உருவாக்கிக் கொண்டு அதை அவரே தீர்பதாகவும் நாடகம் ஒன்றை தயாரித்து 

அரங்கேற்றிவருகின்றார். இவ்வில்பத்துப் பிரச்சினைக்கு அமைச்சர் றிஸாத் செய்கின்ற பணத்தை அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்த முடியுமல்லவா?  

எமது தமிழ் - முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹ{னைஸ் பாறூக் அவர்கள் கடந்த மே மாதம் 20ம் திகதி வில்பத்து பிரச்சினை தொடர்பாக தெளிவான  விளக்கமொன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வில்பத்துப் பிரச்சினையின் யதார்த்த தன்மையினை ஆராயும் நோக்கில் புத்திஜீவிகள், 

துறைசார்ந்தவர்கள் என சுமார் 19 பேர் அடங்கிய குழு ஒன்று தமிழ் - முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.முகைதீன் அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஹ{னைஸ் பாறூக் அவர்களின் இல்லத்தில் அண்மையில் கூடி விரிவாக ஆராய்ந்து ஆவணம் ஒன்றை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்ஆவணத்தை ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்தித்து கையளித்து தெளிவு படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.

வில்பத்துப் பிரச்சினையை இன்று தமிழ் ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஒருசில சிங்கள ஊடகங்களுக்குத்தான் இப்பிரச்சினையை தெளிவு படுத்தவேண்டியுள்ளது. இவ்வாறான நிலைகளில் இருந்து விடுபட்டு அமைச்சர் றிஸாத் பல அமைப்புக்களை  உருவாக்கிக் கொண்டு அவர்களுக்கு பணத்தை வாரி இறைப்பதனால் வில்பத்து விவகாரத்தில் தொடர்பு பட்டுள்ள மக்களின் பிரச்சினையை ஒரு போதும் தீர்க்க முடியாது என்று தமிழ் - முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பிரதிப் பொதுச் செயலாளர் இப்றான்சா பௌமி அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

(ஊடகப் பிரிவு - த.மு.தே.கூ)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar