தமிழ்நாட்டை சேர்ந்த ஆளூர் ஷா நவாசின் காயிதே மில்லத் ப்ற்றிய ஆவணப்படம் இன்று ஷபாப் மண்டபத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடந்தது. இதில் அமைச்சர் பவ்சி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். என் எம் அமீன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். என்னை சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ரஷீத் எம் ஹபீல் வித்தியாசமான முறையி ஷா நவாசிடம் அறிமுகப்படுத்தினார். இவர்தான் உலமா கட்சித்தலைவர். புரட்சிகரமானவர். ஆனால் கடும் குழப்பக்காரராக கருதப்படுகிறார் என்றார். அதன் போது நான் இலங்கையில் உலமாக்கள் தலைமைய்லான முதலாவது அரசியல் கட்சி என்றேன். அதட்கு அவர் இலங்கயில் மட்டுமல்ல உலகிலேயே உலமாக்கள் தலைமைலான முதலாவது கட்சி என்றார். அல்ஹம்துலில்லாஹ். இத்தகைய சிந்தனையை தந்த இறிவனுக்கே புகழ் அனைத்தும்.
-முபாறக் அப்துல் மஜீத்.




Post a Comment