BREAKING NEWS

சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதி வெளியிட்ட நூல்களின் அறிமுகவிழா சென்னையி

சிரேஷ்ட எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமார் எழுதி வெளியிட்ட ஐந்து நூல்களில் மூன்று தமிழ் நூல்களின் அறிமுகவிழா எதிர்வரும் ஜுலை 04 ஆம் திகதி சனிக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்து தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், கலைஞர் கலைச்செல்வன், தினக்குரல் ஞாயிறு பிரதம ஆசிரியர் இராஜநாயகம் பாரதி, வீரசேகரி நிறுவன சென்னைக் கிளையின் முகாமையாளர் உட்பட தொழிலதிபர்களான அம்பிகா ஜுவலர்ஸ் அதிபர் எஸ். சோலைமலைத் தேவர், ஹரி சுப்பிரமணியம், ஜே. பி. தேவபிரான், அல்ஹாஜ், யாkன் ஹாஜி ஆகியோர் கலந்து கொள்வர்.

சென்னை தியாகராஜ நகரிலுள்ள “செரியேற்” நட் சத்திர விடுதியில் சென்னை. இளம் கலைஞர் வட்டம் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழா திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜம்புலிங்கம் நாராயணசாமி தலைமையில் நடைபெறும்.

நீண்ட வருட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை எழுத்தாளர் ஒருவரின் நூல் சென்னையில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுமார் 800 நூல்களின் முதற் பிரதிகளை பெற்றுக் கொண்ட புரவலர் ஹாஸிம் உமர் சென்னையிலும் இந்நூல்களின் சிறப்புப் பிரதிகளை முதலாவதாகப் பெற்றுக் கொள்வார்.
சென்னை, இளம் கலைஞர் வட்டம் சர்பாக திரைப்பட இயக்குனர் தர்மசீலன் செந்தூரன். இலங்கை - இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகன். விவரணத் தொகுப்பாளர் ஈழவாணி ஆகியோர் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar