BREAKING NEWS

இருபதாவது சட்டமூலத்துக்கு ஹக்கீமும், ரிசாதும் ஆதரவளித்தமை சமூக துரோகமாகும்.

20வது தேர்தல் திருத்த சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை சிறுபான்மை மக்களுக்கு கவலை தரும் வியமாகும். இச்சட்ட மூலம் முஸ்லிம்களுக்கு பாரிய பாதகமாக இருப்பதுடன் சிறுபான்மை சமூகங்கள் ஆட்சியில் அழுத்தம் கொடுக்கும் நிலை வராமல் தனி சிங்கள ஆட்சியை கொண்டு செல்லும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்த சட்டத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என மக்கள் மத்தியில் வீறாப்பு பேசிய மு. கா தலைவர் ஹக்கீமும், ம. கா தலைவர் ரிசாதும் மேற்படி திருத்தத்துக்கு ஜனாதிபதி முன்பாக ஆதரவளித்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டதாக சிங்கள, தமிழ் தேசிய ஊடகங்கள் சொலிலியுள்ளன. ஆனால் அமைச்சர்களுக்கு வக்காலத்து வாங்கும் சில தனியார் முஸ்லிம் இணையத்தளங்கள் மட்டுமே இது சம்பந்தமான அமைச்சரவை கூட்டத்தில் ஹக்கீமும், ரிசாதும் ஜனாதிபதியுடன் காரசாரமாக விவாதித்ததாக பொய்யான செய்திகளை வழங்கி மக்களை ஏமாற்ற முயல்கின்றன. ஹக்கீமும், ரிசாதும் வெளியே புலி போல் உறுமினாலும் ஜனாதிபதி முன்பாக பூனையாகி இதற்கு ஆதரவளிப்பர் என்பதை உலமா கட்சி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. அதன் பிரகாரமே இப்போது நடந்துள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்திலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதும் ஜனாதிபதியிடம் சண்டையிட்டதாக மேற்படி அமைச்சர்கள் தமது சார்பு ஊடகங்களிடம் தெரிவிப்பதும், ஜனாதிபதியின் முன்பாக பூனையாகி விடுவதையும் கண்டுள்ளோம். அன்றைய ஜனாதிபதி முன்பாக முஸ்லிம்கள் பிரச்சினை பற்றி உறுதியாக பேசியிருந்தால் அல்;லது இவர்கள் அமைச்சுப்பதவியிலிருந்தாவது விலகியிருந்தால் முஸ்லிம்கள் கொள்கை பற்றுள்ளவர்கள் என்பதை அன்றைய ஜனாதிபதிக்கு சுட்டியிருக்க முடியும், பலஅ னர்த்தங்களை தவிர்த்திருக்க முடியும்.  ஆனால் அமைச்சர்களாக இருந்தால்த்தான் சமூகத்தை பாதுகாக்க முடியும் எனக் கூறி நக்குண்ணிகளாகி சமூகத்தை காட்டிக்கொடுத்தனர். அதனையே இன்றும் தொடர்ந்து செய்கின்றனர்.
ஆகவே இருபதாவது தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு அமைச்சர்களான ஹக்கீமும், ரிசாதும் ஆதரவளித்தமை மிகப்பெரிய சமூக துரோகமாகும்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர், உலமா கட்சி


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar