BREAKING NEWS

கிழக்கு மாகாணத்தின் தலைநகராக மீண்டும் கல்முiயை உயிர்ப்பிக்க வேண்டுமாயின்


கிழக்கு மாகாணத்தின் தலைநகராக மீண்டும் கல்முiயை உயிர்ப்பிக்க வேண்டுமாயின் கல்முனைத்தலைமையை கொண்ட கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக்  அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
ஒரு காலத்தில் கிழக்கின் முகவெற்றிலையாக கல்முனை இருந்தது. இங்கிருந்துதான் கிழக்கு மாகாணத்தின் அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டன. கல்முனை மக்கள் சமூகத்துக்காக சிந்திக்கக்கூடியவர்கள், போராட்ட குனம் கொண்டவர்கள், திறமையான ஆற்றலுள்ளவர்கள் என்பதை முழு இலங்கையும் தெரிந்து வைத்துள்ளது. பலிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத தன் மானம் கொண்டவர்கள் கல்முனை மக்கள். ஆனால் இன்று நமது நிi என்ன?
கலை உலகமாக இருக்கட்டும், பொருளாதாரமாக இருக்கட்டும், அரசியலாகட்டும் அனைத்து விடயங்களிலும் கல்முனை தொகுதிக்குட்பட்ட கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை என அனைத்து ஊர்களும் சிறந்து விளங்கின. ஆனால் என்று நமது அரசியல் தலைமைத்துவத்தை வேறிடத்துக்கு பறிகொடுத்தோமோ அன்று முதல் கல்முனை கிழக்கின் முகவெற்றிலை என்ற நிலையிலிருந்து கிழக்கின் சாக்கடையாக மாறி விட்டது. முட்டாசிக்கடைக்காரக்களுக்கெல்லாம் ஏமாறுகின்ற சமூகமாக மாறி விட்டது.
எந்தவொரு சமூகமும் அது எவ்வளவுதான் வசதிகளையும், ஆற்றலையும் கொண்டிருந்தாலும் அந்த சமூகம் அரசியலில் விழிப்படையாவிட்டால் அந்த சமூகம் அடிமைச்சமூகமாகவே வாழும் என்பதுதான் யதார்த்தம். இன்று கல்முனைக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாம் வளர்த்த கட்சியை பிறருக்கு தாரை வார்த்து விட்டோம். இனி அதனை மீண்டும் கல்முனைத்தலைமை கொண்ட கட்சியாக மாற்றவே முடியாது. இந்த நிலையில் கல்முனைத்தலைமை கொண்ட எமது கட்சி பற்றி மக்கள் அவசியம் சிந்தித்தாக வேண்டும்.
கல்முனையில் சுமார் ஐம்பதினாயிரம் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்கள் மத்தியில் படித்த, அரசியல் அறிவுள்ளவர்கள் இல்லையா? அனைத்தும் நம்மிடம் இருந்தும் நாம் ஏன் மற்றவர்களிடம் பிச்சை கேட்டு நிற்க வேண்டும். இந்த கல்முனைக்குடியில் பிறந்த நாம் சில நூறு வாக்குகள் மட்டும் கொண்ட நாம் தேசிய ரீதியில் ஒரு கட்சியை உருவாக்கி அதனை கடந்த ஆட்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமை கட்சியாக ஆக்கவில்லையா? கல்முனை மக்களில் இருபதினாயிரம் பேர் எமக்கு ஆதரவளித்திருந்தால் போதும் கல்முனையின் இழந்து போன முகவெற்றிலையை மீண்டும் உருவாக்கி முழு தேசமும் கல்முனையை திரும்பிப் பார்க்க வைத்திருக்க எம்மால் முடியும்.
ஆகவேதான் நாம் கல்முனை மாநகருள் உள்ள அனைத்து மக்களையும் அழைக்கின்றோம். எமது சிந்தனை என்ன என்பதை புரிய முயலுங்கள். அதனை புரிந்து கொள்ள எவருக்காவது சிரமமாக இருப்பின் எம்மை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். நாம் நமது கல்முனை பரம்பரையை தொடர்ந்தும் அடிமைகளாக விட்டுச்செல்ல முடியாது. ஓராயிரம் வருடங்கள் போனாலும் கல்முனை தலைமையிலான கட்சி மூலமே கல்முனையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற எமது சிந்தனை இறையுதவியால் வெற்றி பெற்றே தீரும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அடிமைத்துவத்திலும், தாழ்வு மனப்பான்மையிலும், சுயநலத்திலும் பழக்கப்பட்டு விட்டவர்களால் இந்த சிந்தனையை இலகுவாக ஏற்க முடியாதுதான். ஆனாலும் இதற்காக எனது வாழ்க்கையை, பொருளாதாரத்தை தியாகம் செய்து நான் அடித்தளம் இடுகின்றேன். நான் நினைத்தால் யாராவது அமைச்சர் ஒருவரின் ஆலோசகராக, இணைப்பாளராக இருந்து எனது சொந்த வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இன்று அனைத்து ஏமாற்று அமைச்சர்களையும் பகிரங்கமாக கண்டித்துக்கொண்டு கல்முனைத்தலைமையிலான கட்சியை முன்னெடுத்தச்செல்கின்றேன் என்றால் நான் எத்தனை கஷ்டங்களுக்கும், அவதூறுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கின்றேன் என்பதை நிதானமாக சிந்திப்போரால் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே கல்முனை தலைமையிலான கட்சியை பலப்படுத்தி கல்முனையை மீண்டும் கிழக்கின் முகவெற்றிலையாக மாற்ற ஒவ்வொரு கல்முனையானும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar