BREAKING NEWS

ஐ நா கூட்டம்: மஹிந்தவுக்கு வெற்றி

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தாம் கருதவில்லையென்றும், தமது விசாரணையில் இது வெளிப்பட வில்லையென்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக் குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறியதாக ‘இனர்சிட்டி பிரஸ்’ ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச ரீதியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த அறிக்கையில் முழுமையான சர்வதேச பொறுப்புக் கூறும் பொறிமுறைக்குப் பதிலாக, விசேட கலப்பு நீதிமன்ற முறையை அல் ஹுசைன் அறிவித்துச் சென்றிருப்பதாக
இனர்சிட்டி பிறஸ் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கையில் ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித்த கொஹன மற்றும் ஐ.நாவுக்கான அதிகாரி சவேந்திர டி சில்வா ஆகியோரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், இறுதிக் கட்டத்தில் கிளிநொச்சியில் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைப் பாதுகாப்பதற்கு சர்வதேச தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த முயற்சிகள் பற்றி இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லையென்றும், ஐ.நா தனது செயற்பாட்டை மறைத்திருப்பதாகவும் இனர்சிட்டி பிறஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒன்லைன் மூலம் முன்கூட்டியே கேள்விகளைக் கேட்பதற்கா சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வில்லையெனத் தெரிவித்திருக்கும் இனர்சிட்டி பிறஸ், ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தைவிட 10 நிமிடம் முன்னதாகவே ஹ¥சைன் ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவித்துள்ளது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar