BREAKING NEWS

ஆர். பாஸகரலிங்கம் வீடமைப்புத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு முன்வந்துள்ளாா்.

அஸ்ரப் ஏ  சமத்

முன்னாள் ஜனாதிபதியின் ஆர். பிரேமாதாசாவின் செயலாளராகாவும் கடமையாற்றி தற்பொழுது பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார திட்டமிடல் அமைச்சின் ஆலோசகராக கடமையாற்றும் ஆர். பாஸகரலிங்கம்  வீடமைப்புத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு முன்வந்துள்ளாா்.
மேற்படி கூட்டம் இன்று செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசவுடன் கொழும்பு மாவட்டத்தில் நடுத்தர வா்ககத்திற்காக 5 இலட்சம ்வீடுகளை  நிர்மாணிக்கும் பணிக்கான திட்ட வரைபினை ஆர். பாஸகரலிங்கம் பொறுப்பேற்றுள்ளாா்.
இத்திட்டம் கொழும்பில் 800-1000 வா்க்க அடி கொண்ட தொடா்மாடி வீடுகளை நிர்மாணிப்பத்றகாக நகர அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, ரயில் வே திணைக்கள அரச காணிகளை அடையாளம் காண்பதற்காக கலந்துரையாடப்பட்டது. பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் அனுமதியின்படி கொழும்பில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மணிப்பதற்கே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்திற்காக ஆர். பிரேமாசாவின் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக கடமையா்ற்றியாக முன்னாள் செயலாளா அயிலப்பெருமவும் கலந்து கொண்டாா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar