ஊடகவியலாளர்களுக்கு புதிய வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் வழங்கும் வேலைத் திட்டம் துரிதப்படுத்தப்படுமென பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணா திலக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுக் கடமைகளை நேற்று பொறுப் பேற்றுக்கொண்ட அமைச்சர் அந் நிகழ்விற்கு வருகை தந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
ஹோமாகம தியகம பிரதேசத்தில் 102 ஏக்கரில் ஊடவியலாளர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதென்றும் அவர் கூறினார்.
வரி இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நாம் ஆரம்பித்த திட்டத்திற்கு இதுவரை மூவாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் அங்கு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்களுக்கென பல கனவுகள் உள்ளன. அவற்றை படிப்படியாக நனவாக்குவதே எமது குறிக்கோள் என்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
Post a Comment