சம்மாந்துறை சொறிக்கல்முனை மஸ்ஜித் ரவ்லா பள்ளிவாசல் உடைக்கப்பட்டமை நல்லாட்சியை கேள்விக்குட்படுத்தியிருப்பதுடன் குற்றவாளிகளை கண்டு பிடிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள தொலை நகலில் குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த மஹிந்த அரசில் பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டமை காரணமாகவே மஹிந்த அரசை முஸ்லிம்கள்வெறுத்தனர். அதே நிலை இன்றைய அரசிலும் தொடர்வது நல்லாட்சியிலும் இனவாதம் ஒழியவில்லை என்பதையே காட்டுகிறது. அதுவும் அரசின் பிரதான அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளமை 2002ம் ஆண்டு ஹக்கீம் இருக்கும் போதே மூதூர் தாக்கப்பட்டமையை ஞபகப்படுத்துகிறது.
அப்போது போன்றே இப்போதும் உடைக்கப்பட்ட மேற்படி பள்ளிவாயலை சுற்றுலா பயணி போல் பார்த்துவிட்டு சென்றுள்ளாரே தவிர இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஆக்வே 45 வருட வரலாறு கொண்ட இந்த பள்ளிவாயல் இடிக்கப்பட்டுள்ளமை மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் இது விடயத்தில் அரசு உடனடியாக தொடர்பு கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதுடன் அரச உதவியில் மீள் கட்டப்பட வேண்டும் என உலமா கட்சி வலியுறுத்துகிறது.

Post a Comment