நாட்டின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலான அரசியல் தீர்வுத்திட்டத்தை உள்ளடங்குகின்ற வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வைக்காண்பதா அல்லது அதற்கு அப்பாற்பட்டு தீர்வுக்கு செல்வதா என்பது குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment