பாறுக் ஷிஹான்
விசேட அதிரடிப்படையினரால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் என்ன நடந்தது என அங்குள்ள விதவைப் பெண்களிடம் கேட்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
வட்டுக்கோட்டை ஒப்பந்தத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறிகாந்தா இவ்வாறு குறிப்பிட்டார்.
இராணுவத்தை வேண்டாம் எனவும், இராணுவ முகாம்களை அகற்றுங்கள் என கோரும் தமிழர்கள், தமது பிரதேசங்களில் தமிழ் மொழி தெரிந்த பொலிஸாரை பணியில் அமர்த்துமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசேட அதிரடிப்படையினர் தமிழர் பிரதேசங்களில் இரவும் பகலும் வலம்வருவதை ஏற்றுக்கொள்ள முடியுமா என கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.
இவ்வாறான செயற்றப்பட்டிற்கு எதிர்ப்பு குரல்கொடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இளம் தலைவர் ஒருவர் வீதியில் இறங்கினால் அடுத்த ஆறு மாதங்களின் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் எனவும் சிறிகாந்தா குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இந்த துணிச்சல் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஒற்றுமை என்பது எவ்வளவு தூரம் நீடிக்கும் என வினவியுள்ளார்.
இரண்டாம்மகா யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இன்றும் அழுகுரல்கள் கேட்பதாக தெரிவித்த அவர், சிலர் கோட் சூட் அணிந்துகொண்டு மாகாணசபையில் அரசியல் பேசுவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment