கொலண்ணாவையில் நிறைந்திருக்கும் குப்பைகளை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். நேற்று அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெள்ள அனர்த்தம் காரணமாக கொலன்னாவ பகுதியில் 470 டிரக்டர் குப்பைகள் சேர்ந்துள்ளன. இதுவரை 75 டிரக்டர்கள் கிடைக்கப்பெற்று துரித கதியில் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுவாக கொலன்னாவ பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த பொருட்களில் அரைவாசிக்க மேல் குப்பையாகி விட்ட நிலையில் அவற்றை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. இதற்;காக அரசு முணைப்புடன் செயற்படுகிறது எனவும் தெரிவித்தார்.
அத்துடன் குப்பைகள் அகற்றறுவது சம்பந்தமாக அவசர தேவைகள் உள்ளவர்கள் பின்வரும் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளும் படியும் அமைச்சர் தெரிவித்தார்.
0112302722
0714764514 (அவசர சேவை பணிப்பாளர்)

Post a Comment