ரமழான் காலத்தில் இளைஞர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்குகளைப் பேனி நடக்கவேண்டும்
ரமழான் நோன்பு காலம் நம்மத்தியில் மீண்டும் வந்தடைந்துள்ள நிலையில் கொழும்பு வாழ் முஸ்லிம்கள் மிக அவதானத்துடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள முன் வரவேண்டியது இன்றைய காலத்தின் மிக முக்கிய தேவையாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டதரணி பைஸர் முஸ்தபா சகல முஸ்லிம்களிடமும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியின் கீழ் மிக முக்கிய கால கட்டத்தில் நம் மத்தியில் புனித ரமழான் நோன்பு வந்தடைந்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் மிக்க கண்ணியத்துடனும் அடுத்தவர்களது உள்ளம் புண்படாத வகையில் வீண் பிரச்சனைகளை எற்படுத்திக் கொள்ளாமல் அதிலிருந்து இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுமாறும் நான் அவர்களைக் கேட்கின்றேன்.
இம் மாதத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும் செயல்களும் நிறையவே உண்டு. இந்நிலையில் கிராமியப் பகுதிகளில் குறிப்பாக கொழும்பு நகர்ப் பகுதியிலுள்ள இளைஞர்கள் இரவு வேளைகளில் வீதிகளில் இறங்கி விளையாடி வருகின்றனர். இதனால் உன்மையான நோக்கம் தவறிவிடுகின்றது. பொலிசாருக்கும் தமது கடடையை புரிவதற்கும் தடையேற்படுகிறது.
எனவே இளைஞர்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை கடைபிடிப்பதோட தவறான செயல்கள், வீதிகளில் விளையாடுதல் கூக்குரலிடுதல் போன்றவற்றை தவிர்த்து புனித அல்குர்ஆன், போதித்துள்ள வழியில் நடக்குமாறு கேட்டுக்கொள்வதோடு இது விடயத்தில் பெற்றோரும் அவதானமாக இருக்க வேண்டும்.

Post a Comment