BREAKING NEWS

பிரயோக விஞ்ஞான பீட ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு



தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு!......
-எம்.வை.அமீர் -
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி யு.எல்.செயினுடீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனாவுடைய பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 2016-07-21 ஆம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தலைமையில் இடம்பெற்ற விசேட பீடசபை அமர்வின்போது  கலாநிதி யு.எல்.செயினுடீன் எகமனத்தாக பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த கலாநிதி செயினுடீன், பௌதீக விஞ்ஞான திணைக்களத்தினூடாக தெரிவாகும் முதலாவது பீடாதிபதியும், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவருமாவார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar