BREAKING NEWS

பிர‌தேச‌ ச‌பை வ‌ழ‌ங்க‌த்தான் வேண்டும்

சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பை ச‌ம்ப‌ந்த‌மாக‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்தபாவுட‌ன் பேசுவ‌த‌ற்கு சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளி த‌லைமையிலான‌ குழு கொழும்பு வ‌ந்துள்ள‌து. சாய்ந்த‌ம‌ருதுக்கு த‌னியான‌ பிர‌தேச‌ ச‌பை வ‌ழ‌ங்க‌த்தான் வேண்டும் என்ப‌தை முத‌லில் ஏற்றுக்கொண்ட‌ முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சி என்ற‌ வ‌கையில் இவ‌ர்க‌ளின் முய‌ற்சி வெற்றிபெற‌ வேண்டும் என‌ விரும்புகிறோம்.

சாய்ந்த‌ம‌ருது என்ப‌து 98 வீத‌ம் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் வாக்குக‌ளை கொண்ட‌ ஊராகும். இம்ம‌க்க‌ள் த‌ம‌க்கொரு பிர‌தேச‌ ச‌பை வேண்டி த‌ம்மை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தும் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூஃப் ஹ‌க்கீமிட‌ம் இது ப‌ற்றி ப‌ல‌ த‌ட‌வைக‌ள் கோரிக்கை விடுத்தும் எடுப‌டாம‌ல் போன‌தால் த‌ற்போது அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பாவை அணுகுவ‌து ந‌ல்ல‌ விச‌ய‌ம்.
கிழ‌க்கு ம‌க்க‌ளை எப்ப‌டி ஏமாற்றுவ‌து என்ப‌தில் ப‌ழ‌ம் தின்ற‌வ‌ர் ஹ‌க்கீம் என்ப‌தை சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் த‌ற்போது  உண‌ர்ந்திருப்பார்க‌ளாயின் பாராட்டுக்குரிய‌தாக‌ இருக்கும்.

சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பை விட‌ய‌த்தில் ஏனைய‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் பெரிதாக‌ அல‌ட்டிக்கொள்ளாமைக்கு கார‌ண‌ம் நாம் இத‌னை பெற்றுக்கொடுத்தாலும் ம‌க்க‌ள் ம‌ர‌த்துக்கே வாக்க‌ளிப்பார்க‌ள் என்ற‌ எண்ண‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம். க‌டந்த‌ கால‌ங்க‌ளில் சாய்ந்த‌ம‌ருதுக்கு அமைச்ச‌ர் அதாவுள்ளா, ஹ‌க்கீமை விட ப‌ல‌ ம‌டங்கு சேவைக‌ளை செய்திருந்தும் அவ‌ர‌து க‌ட்சிக்கு ஆயிர‌த்துக்கும் குறைவான‌ வாக்குக‌ளே கிடைத்துள்ள‌ன‌.
ஆக‌வே சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் முத‌லில் முஸ்லிம் காங்கிர‌சிலிருந்து வெளியேற‌ வேண்டும். த‌ங்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுப்போர் யார், சேவை செய்வோர் என்ப‌தை இன‌ம் க‌ண்டு அவ‌ர்க‌ளை அர‌சிய‌ல் ரீதியாக‌ ப‌ல‌ப்ப‌டுத்த‌ வேண்டும். அத‌ன் மூல‌ம் பிர‌தேச‌ ச‌பையை இல‌குவாக‌ வெல்ல‌லாம் என்ற‌ ய‌தார்த்த‌த்தை புரிந்து கொள்ள‌ வேண்டும். கூளுக்கு ஆசை மீசைக்கும் ஆசை என்ப‌து அர‌சிய‌லில் ச‌ரி வ‌ராது. த‌ங்க‌ளை ஏமாற்றும் மு. காவும் வேண்டும்.  ஏனைய‌ க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு உத‌வ‌வும் வேண்டும் என்ற‌ நிலைமை மாறி அர‌சிய‌லில் த‌ம‌து உண்மையான‌ விசுவாச‌த்தை காட்ட‌ வேண்டும். அதுவே சாய்ந்த‌ம‌ருது  ம‌க்க‌ளின் உரிமைக‌ளையும் தேவைக‌ளையும் வெல்லும் இறைவ‌னுக்கு பிடித்தமான‌ வ‌ழியாகும்.
மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar